நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளி சிற்றுண்டிகளில் உணவு விலை கட்டுங்கடக்காத உயர்வு: கல்வியமைச்சு கவனத்தில் கொள்ள வேண்டும்

கோலாலம்பூர்:

பள்ளி சிற்றுண்டிகளில் உணவு விலை கட்டுங் கடக்காமல் உயர்ந்து வருகிறது.

இதை கல்வியமைச்சு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் அரசியல் ஆய்வாளர் ஷாஹிர் அட்னான் கூறினார்.

கடந்த வாரம் பள்ளி அமர்வு மீண்டும் திறக்கப்பட்ட பின்னர், 

பள்ளி சிற்றுகளில் உணவு விலையில் அதிகரிப்பு ஏற்பட்டதாக பெற்றோரிடமிருந்து புகார்கள் வந்துள்ளது.

கடந்த வாரம் சில பள்ளி சிற்றுண்டிகளில் உணவு விலையில் அதிகரிப்பு ஏற்பட்டதாக பெற்றோரிடமிருந்து புகார்கள் வந்துள்ளது.

கிள்ளான் பள்ளதாக்கில் உள்ள பள்ளிகளிம் மேற்கொண்ட ஆய்வில் படி,

முன்பு பொறித்த கோழி இறைச்சி ஒரு துண்டுக்கு 2 ரிங்கிட்டாகும்.  ஆனால் இப்போது ஒரு துண்டு 3 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது.

அரிசி, சம்பால், நெத்திலி ஆகியவற்றின் அளவு அப்படியே இருந்தாலும் அதன் விளை 1.50 ரிங்கிட்டில் இருந்து 2 ரிங்கிட்டுக்கு உயர்ந்துள்ளது.

மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பு, அரசு மானியம் இல்லாததது, குறிப்பாக மின் கட்டணம் உள்ளிட்டவற்றின் காரணமாக, விலை உயர்வுக்கான காரணம் என்று சிற்றுண்டி  நடத்துபவர் கூறுகின்றனர்.

ஆகவே இந்த விவகாரத்தை கல்வியமைச்சு உடனடியாக கண்காணிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset