நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறு, நடுத்தர தொழில் வணிகர்களுக்கு எஸ்எம்இ கோர்ப் தொடர்ந்து கைகொடுக்கும்: டத்தோ ரமணன்

கோலாலம்பூர்: 

சிறு, நடுத்தர தொழில் வணிகர்களுக்கு எஸ்எம்இ கோர்ப் தொடர்ந்து கைகொடுக்கும்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் கூறினார்.

நாட்டில் வியாபாரம் செய்யும் சிறு நடுத்தர வணிகர்களுக்கு கடன், நிதி என்ற அடிப்படையில் எஸ்எம்இ கோர்ப் உதவிகளை  வழங்கி வருகிறது.

அவ்வகையில் கடந்தாண்டு 131.3 மில்லியன் ரிங்கிட் நிதியின் வாயிலாக 22,861 பேர் பயன் பெற்றுள்ளனர்.

இவ்வாண்டு 16,700 வணிகர்களுக்கு உதவும் திட்டத்தை எஸ்எம்இ கோர்ப் கொண்டுள்ளது.

குறிப்பாக 31 மில்லியன் ரிங்கிட்டில் 5 மில்லியன் ரிங்கிட் பிரக்தியேகமான இந்திய வணிகர்களுக்கு என ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த 5 மில்லியன் ரிங்கிட்டும் அதிகமான விண்ணப்பங்கள் அதுவும் முறையாக இருந்தால் அதற்கு உதவவும் எஸ்எம்இ கோர்ப் தயாராக உள்ளது.

ஆகவே இந்திய சிறு நடுத்தர வணிகர்கள் எதுவும் கிடைக்கவில்லை என மனம் வருந்தாமல் எஸ்எம்இ கோர்ப் போன்ற நிறுவனங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக கோரப்படும் ஆவணங்களை நமது வணிகர்கள் முறையாக சமர்பிக்க வேண்டும் என்று டத்தோ ரமணன் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset