நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெங்காயத்தின் விலையை உயர்த்தும் வணிகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

ஜோர்ஜ்டவுன்: 

வெங்காயத்தின் விலையை உயர்த்தும் வணிகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பினாங்கு மாநில  உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கை செலவின துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு வெங்காயத்தின் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளதையடுத்து கே.பி.டி என் துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 

பினாங்கு மாநிலத்தில் சில வியாபாரிகள் வெங்காயத்தை கிலோவுக்கு 9 ரிங்கிட்டாக விற்பனை செய்கின்றனர் என்று பினாங்கு மாநில பயனீட்டாளர் சங்கம் குற்றஞ்சாட்டியது. 

இருப்பினும், சம்பந்தப்பட்ட பகுதியில் KPDN தரப்பு முழு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று பினாங்கு மாநில கே.பி.டி.என் இயக்குநர் எஸ். ஜெகன் கூறினார்.  CAP[ சங்கத்தின் புகாரை தமது துறை கடுமையாக கருதுவதாகவும் அவர் சொன்னார். 

2011ஆம் ஆண்டு பொருட்கள் விலை கட்டுபாட்டு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெகன் உறுதியளித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset