நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ரா நிதி தேவைப்படும் மக்களை சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: தாமோதரன்

கோம்பாக்:

மித்ரா நிதி தேவைப்படும் மக்களுக்கு சென்று சேருவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று பேரின்பம் இயக்கத்தின் தேசியத் தலைவர் யு. தாமோதரன் இதனை வலியுறுத்தினார்.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கும் மேலாக பேரின்பம் இயக்கம் செயல்பட்டு வருகிறது.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் வசதிக் குறைந்த மக்கள் வரை அனைவரும் பயனடையும் நோக்கில் பல திட்டங்களை இவ்வியக்கம் மேற்கொண்டு வந்தது.

ஆரம்பத்தில் சொந்த நிதியை கொண்டு செயல்பட்ட இச் சங்கத்திற்கு மித்ரா வாயிலாக ஒரு முறை நிதி கிடைத்தது.

அந்நிதி முறையாக சமுதாய மக்களுக்கான திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது.

ஆனால், அதன் பின் எந்த நிதியும் சங்கத்திற்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் எங்களின் பணிகள் தொடர்ந்து வருகிறது..

கோவிட்-19 தொற்று தாக்கத்தால் சங்கத்தின் பல நடவடிக்கைகள் தடைப்பட்டது.

இவ்வாண்டு மீண்டும் தனது நடவடிக்கைகளை இயக்கம் முழுமையாக மேற்கொள்ளவுள்ளது.

இதற்கு அரசாங்கத்தின் உதவியும் ஆதரவும் எங்களுக்கு தேவைப்படுகிறது.

பிரதமர் துறையின் கீழ் இருந்த மித்ரா தற்போது தேசிய ஒருமைப்பட்டு அமைச்சின் கீழ் மாற்றப்பட்டு உள்ளது.

மித்ரா எங்கு மாற்றப்பட்டாலும் அதன் இலக்குகள் முழுமையாக அடைய வேண்டும்.

குறிப்பாக தேவைப்படும் மக்களுக்கு அந்நிதி சென்றடைய வேண்டும். 

இதனை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தாமோதரன் கேட்டுக் கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset