நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ரா, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படும்

புத்ராஜெயா:

மித்ரா, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஆகியவை இனி தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படும்.

அத்துறையின் அமைச்சர் ஏரன் அகோ டாகாங் இதனை உறுதிப்படுத்தினார்.

பிரதமர் அண்மையில்  அறிவித்த  அமைச்சரவை மறுசீரமைப்பின் வாயிலாக  அரசு நிறுவனங்களும் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. 

இதன் அடிப்படையில் மித்ரா எனப்படும்  மலேசிய இந்திய சமூக மாற்றப் பிரிவு , பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஆகியவை இனி தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சிற்கு மாற்றப்பட்டது.

தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் இரண்டு நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளதால்,

மலேசிய இந்திய சமூகத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் நீண்ட கால  திட்டங்களை மேற்கொள்ள முடியும்.

குறிப்பாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் இந்த அமைச்சின் கீழ் மேம்படுத்த முடியும்.

கல்வி, பொருளாதாரம், சமூகத் துறைகள் உட்பட இந்திய சமூகத்தின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் இதன்  திட்டங்களை மேம்படுத்துவதன் மூலம் இந்திய சமூகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு  அமைச்சு உறுதியுடன் உள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட பி40 இந்திய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், மனித மூலதன மேம்பாடு, தொழில் முனைவோர் வாய்ப்புகள் ஆகியவை தொடர்ந்து பலப்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset