நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் வர்த்தகக் குற்றங்கள் உயர்வு

கோலாலம்பூர் :

நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் வர்த்தகக் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை  53.2 விழுக்காடு உயர்ந்துள்ளது. 

இதனால், 1,433 கோடி வெள்ளி  இழப்பு ஏற்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முஹம்மத் யூசுப் தெரிவித்தார்.

தொழில்நுட்ப மாற்றம் மற்றும் தொலைத்தொடர்பு உலகின் வளர்ச்சியின் காரணமாகப்  புதிய பாணியிலான பல்வேறு மோசடி  யுக்திகள் கையாளப்படுகின்றன.

இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வணிகக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. 

கடந்த  2019-ஆம் ஆண்டில் 26,330 மோசடிச் சம்பவங்களில்  6,217 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டதாகக் கூறிய அவர், 2020-ஆம் ஆண்டில் 2,064 கோடி வெள்ளியும் (27,323 சம்பவங்கள்), 2021-ஆம் ஆண்டு 2,206 கோடி வெள்ளியும் (31,490 சம்பவங்கள்), 2022இல் 1,733 கோடி வெள்ளியும்,  (30,536  சம்பவங்கள்) 2023-ஆம் ஆண்டு 211 கோடி வெள்ளியும் (40,350 சம்பவங்கள்) இழப்புகள் பதிவு செய்யப்பட்டன என்றார்.

கடந்த ஐந்து வருடங்களாகப் புலனாய்வு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அதிகரித்து வரும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறைக்குப்  பெரும் சவாலாக இருப்பதை அஅவர் ஒப்புக் கொண்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset