நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் புலமை பெறுவது சிறப்பு: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

தேசிய மொழியை விடுத்து ஆங்கில மொழியைத் தாம் ஊக்குவிப்பதில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

உலகின் பல பல்கலைக்கழகங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் புலமை பெறுவதை வலியுறுத்துகின்றன என்று உலக வர்த்தக மையமான கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற உயர்க்கல்வி அமைச்சகத்தின் மூலோபாய நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் தாய்மொழிகளின் மீது வலுவான பற்று கொண்டிருந்தாலும் உயர்கல்வி கூடங்களில் மாணவர்கள் ஆங்கிலத்திலும் புலமை கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் துன் டாக்டர் மகாதீர் முஹம்மத்தின் சமீபத்தியக் குற்றச்சாட்டை மறுத்துவிட்டு மாறாக, முன்னாள் பிரதமர் தமது  உடல்நிலையைக் கவனிக்குமாறு அன்வார் அறிவுறுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset