நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்திற்கு சொந்தமான தகவல்களை முடக்கி விற்பனை செய்த நபர் கைது

கோலாலம்பூர்:

டார்க் வெப் இணையத்தளத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான தகவல்களை முடக்கி அதனை விற்பனை செய்த தகவல் தொழில்நுட்ப நிபுணர்  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயது இளைஞன் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிசிஐடி) இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் கூறினார். 

அந்த நபர் ஒவ்வொரு தரவுத் தொகுப்பையும்  200 அமெரிக்க டாலருக்கு இணையதளத்தில் விற்றதாகவும், பணம் கிரிப்டோகரன்சி வடிவத்தில் இருப்பதாகவும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.

சிசிஐடி கிரிப்டோகரன்சி குற்றப் புலனாய்வுப் பிரிவின் செயல்திறனால்  அந்த நபரைக் காவல்துறையினர் வெற்றிகரமாகக் கண்டறிந்தனர். 

குறுகியக் காலக்கட்டத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மீது இதுவரை எந்தக் குற்றப் பதிவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்நபர் டிசம்பர் 29-ஆம் தேதி போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும், கணினி குற்றச் சட்டம் 1997 இன் பிரிவு 4(1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ரம்லி கூறினார்.

இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றவாளிகளுக்கு சிசிஐடி கடுமையான எச்சரிக்கையை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset