நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்து இந்திய கட்சிகளையும் ஒன்றிணைப்போம்: MIPP கட்சி தலைவர் புனிதன் அறிவிப்பு 

கோலாலம்பூர்: 

நாட்டிலுள்ள அனைத்து இந்திய அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைப்போம் என்று மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தேசிய தலைவர் பி.புனிதன் அறிவித்துள்ளார். 

அமைச்சரவையில் தமிழ்ப்பேசக்கூடிய ஓர் இந்திய அமைச்சர் கூட இடம்பெறாதது என்பது இந்திய சமூகத்திற்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. மேலும், பல்வேறு விவகாரங்களை இந்திய சமூகத்தைப் பாதிப்படைய செய்வதாக முன்னாள் ம.இ.கா உறுப்பினருமான அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், அனைத்து இந்திய தலைவர்களையும் ஒன்றிணைத்து ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யவும் பி.புனிதன் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

இதனால், இந்திய சமூகம் வலுவாகவும் நிலைத்தன்மையுடனும் விளங்கும் அதேவேளையில் புத்ராஜெயாவுடன் பேச்சுவார்த்தைகளும் நடத்த இது ஏதுவாக அமையும் என்று புனிதன் சொன்னார். 

இந்த கலந்துரையாடலில் தமிழ்ப்பள்ளி, பொருளாதார உருமாற்றம் ஆகிய விவகாரங்களும் விவாதிக்கப்படும். நாட்டிலுள்ள 14 இந்திய அரசியல் கட்சிகளுக்கு இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிலே ஐந்து கட்சி கலந்துக்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் ஆங்கில இணைய செய்தி தளமான FMT யிடம் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset