செய்திகள் மலேசியா
சித்தியவானில் பசுமை நினைவில் பி.எல்.கே.என். நூல் வெளியீடு
சித்தியவான்:
ஆசிரியர் எஸ்.கிருஷ்ணன், ஆர். ரவிச்சந்தர் ஆகிய இருவர் எழுதிய பசுமை நினைவில் பி.எல்.கே.என் எனும் தேசிய சேவை பயிற்சித் திட்டம் தொடர்பான ஆவண நூல் சித்தியவான் சித்தர் குடில் ஆன்மிக மையத்தில் வெளியீடு கண்டது.
அரசாங்கம் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் நடத்தி வந்த வந்த பி.எல்.கே.என். எனும் தேசிய சேவை பயிற்சித்திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களும் இந்நூலில் தொகுக்கப்பட்டுளளன.
பல நாடுகளில் இத்திட்டம் மேற்கொண்டு வந்தாலும் நம் நாட்டில் இத்திட்டம் தொடங்கப்பட்ட வரலாறு, அதன் நோக்கம், பின்னணி, 3 மாத காலக்கடத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டப் பயிற்சிகள் போன்றவை இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இளைஞர்களின் மனங்களில் தேசப்பற்றை வளர்த்து தலைமைத்துவப் பண்பை வளர்க்கும் நோக்கத்தின் அடிப்படையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டதை இந்நூல் நன்கு விளக்குகிறது.
அதுமட்டுமில்லாமல் மாணவர்களின் உணவு, உடை, பயிற்சி அனுபவங்கள், துப்பாக்கியில் குறிசுடும் பயிற்சி அனுபவங்கள் போன்றவை இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
மலேசிய அரசாங்கத்தால் நடத்தப்பட்ட தேசிய சேவை பயிற்சித் திட்டத்தினை தமிழ்மொழியில் ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூலை எழுதியுள்ளதாக ஆசிரியர்கள் இருவருன் தெரிவித்தனர்.
சுங்கை வாங்கி ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத் தலைவர் சு.ப. கதிரவன் தலைமை தாங்கி நூலினை வெளியீடு செய்ய
முதல் நூலை மஞ்சோங் மாவட்ட சமூக சேவகி லீலா லெட்சுமி கோவிந்தசாமி பெற்றுக்கொண்டார்.
தஞ்சோங் மாலிம் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் முனைவர் கிங்ஸ்டன் பால் தம்புராஜ் நூல் அறிமுகம் செய்தார். ஒரு சிறந்த நூலின் கூறுகளைப் பற்றி நன்னூல் குறிப்பிடும் 10 கூறுகளின் அடிப்படையில் இந்நூலினை ஆய்வு செய்ததில் எல்லா கூறுகளிலும் இந்நூல் மிகச்சிறப்பாக எழுதப்பட்டுள்ளதாக புகழாரம் சூட்டினார்.
கி.பெரியண்ணன், கவிஞர் ந.கு.முல்லைச் செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர்களுள் ஒருவரான ஆசிரியர் கிருஷ்ணன் ஏற்புரை வழங்கினார். ஆசிரியர் கோபால் நிகழ்ச்சி நெறியாளராக இருந்து சிறப்பாக வழிநடத்தினார்.
ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 7:31 pm
இந்திய கிராமங்களை மேம்படுத்தும் திட்டம்; சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு வித்திடும்: குணராஜ்
November 21, 2024, 7:30 pm
கல்வி, பொது சேவைத் துறையில் சம உரிமையை இந்தியர்கள் எதிர்பார்க்கின்றனர்: கேசவன்
November 21, 2024, 7:29 pm
சுங்கைபூலோ மக்கள் நல இயக்கத்தின் தீபாவளி விருந்தோம்பல்: 2,000 பேர் பங்கேற்பு
November 21, 2024, 5:20 pm
பெர்சேவின் மதிப்பீட்டில் அடுத்த முறை ஏ பெறுவோம்: பிரதமர் அன்வார்
November 21, 2024, 4:30 pm
எல்இடி விளம்பரப் பலகைகளில் தற்போதைய வானிலை பற்றிய எச்சரிக்கைகள் ஒளிப்பரப்படும்
November 21, 2024, 1:19 pm
கேகே - கேஜூ காய் சிலாங்கூர் பொது கராத்தே போட்டியில் 450 போட்டியாளர்கள் பங்கேற்பு
November 21, 2024, 1:10 pm