நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ரா வெளிப்படையானதா என்பது அகப்பக்கத்தில் தெரியும்; இதை வைத்து அரசியல் நடத்த வேண்டாம்: ரமணன் காட்டம்

கோலாலம்பூர்:

மித்ரா வெளிப்படையானதா இல்லையா என்பது குறித்து அகப்பக்கத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அதை விடுத்து மித்ராவை வைத்து அரசியல் நடத்துவதை அனைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் காட்டமாக கூறினார்.

தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் மித்ரா கொண்டு செல்லப்படும் என பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.

இனி இந்த மித்ராவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சு தான் முடிவுகளை எடுக்கும்.

அதேவேளையில் கடந்த 2023ஆம் ஆண்டு மித்ராவின் சிறப்பு பணி குழு தலைவராக நான் நியமிக்கப்பட்டேன்.

அந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் முழுமையாக செலவிடப்பட்டது. இதற்கான கணக்கு வழக்குகள் அனைத்தும் முறையாக உள்ளது.

குறிப்பாக மித்ராவின் வழி யார் நீதி பெற்றார் என்பதை குறித்த தகவல்கள் அனைத்தும் அதன் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இருந்தாலும் ஒரு சிலர் இந்த அகப்பக்கத்தை சரி பார்க்காமல் மித்ராவை தொடர்ந்து சாடி வருகின்றனர்.

மித்ராவின் வெளிப்படை தன்மை குறித்து கேள்வி எழுப்பவர்கள் தாராளமாக அதன் அகப்பக்கங்களை சரி பார்த்துக் கொள்ளலாம்.

அதை விடுத்து இந்த மித்ராவை வைத்து யாரும் அரசியல் நடத்த வேண்டாம்.

அதே வேளையில் ஒரு சில தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளில் பிரச்சனைகள் இருந்தது.

அந்த கணினிகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பல பள்ளிகளில் இந்த மடிக்கணினிகள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் பயனாக இருந்து வருகிறது.

பல தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களும் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதையெல்லாம் பார்க்காத ஒரு சிலர் பிரச்சினைகளை மட்டும் வெளிப்படையாக காட்டி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதெல்லாம் சமுதாயத்திற்கு தான் கெட்ட பேராகும் என்று டத்தோ ரமணன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset