நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நியத் தொழிலாளர்கள் நிர்வகிப்பு தொடர்பில் சைஃபுதீன், சிம் விவாதிப்பு

புத்ராஜெயா:

உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில், மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோர் நேற்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் மலேசியாவில் அந்நியத் தொழிலாளர்களை நிர்வகிப்பதில் முன்னோக்கி செல்லும் வழி குறித்து இருவரும் விவாதித்தனர்.

வாக்குறுதி அடிப்படையில் வேலை வழங்கத் தவறியதற்காக தங்கள் முகவர்களுக்கு எதிராக போலிஸ் புகார் அளிக்கும் அணிவகுப்பில் அந்நியத் தொழிலாளர்கள் பங்கேற்றனர். 

கடந்த டிசம்பர் 20 அன்று ஜொகூரில்  சம்பந்தப்பட்ட 171 வங்காளதேச தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்நியத் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவது
ஒரு சூடான,  தீவிரமான பிரச்சினை என்பதை ஒப்புக் கொள்கிறோம்.

ஆகவே அந்நியத் தொழிலாளர் நிர்வாகத்தின் பகிரப்பட்ட நோக்கத்தில் இந்த சந்திப்பு கவனம் செலுத்துவதாக சைஃபுதீன் கூறினார்.

மேலும் மலேசியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிர்வாகத்தில் செய்யக்கூடிய மேம்பாடுகளை உள்ளடக்கிய 2024 ஆம் ஆண்டிற்கான முன்னோக்கிய வழியையும் நாங்கள் விவாதித்தோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset