நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெக்குனில் கூடுதல் நிதி வேண்டும் என்ற ரமணனின் பரிந்துரை இந்திய தொழில் முனைவர்களுக்கு பயனளிக்கும்: மைக்கி

கோலாலம்பூர்:

இந்தியர்களுக்கு தெக்குன் வாயிலாக கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என டத்தோ ரமணன் பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

அவரின் இந்த பரிந்துரை  இந்திய தொழில் முனைவர்களுக்கு பயனளிக்கும் என மைக்கியின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறையின் துணையமைச்சராக டத்தோ ரமணன் பொறுப்பேற்றுள்ளார்.

அமைச்சின் கீழ் இயங்கும் தெக்குன் உட்பட பல இலாகாக்களுக்கு அவர் பயணம் மேற்கொண்டார்.

அதன் பின் அமைச்சர் இவான் பெனடிக்கை சந்தித்த அவர், தெக்குனின் இந்திய சமுதாயத்திற்கு கூடுதல் நிதி வேண்டும் எனும் பரிந்துரையை  முன் வைத்துள்ளார்.

இந்த விவகாரத்தை அமைச்சர், பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.

அவரின் இந்த பரிந்துரையை மைக்கி வரவேற்கிறது.

இந்திய தொழில் முனைவர்களுக்கு என அரசாங்கம் தெக்குன் வாயிலாக 30 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்குகிறது. ஆனால், இத் தொகை போதுமானதாக இல்லை.

வர்த்தக ரீதியில் இந்தியர்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக நிதிச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

அதன் அடிப்படையில் டத்தோ ரமணனின் இந்த பரிந்துரை பாராட்டுக்குறியது.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அவரது அர்ப்பணிப்பு, இந்திய தொழில் முனைவோர் தேவைகளுடன் ஒத்துப்போகும் ஒரு செயலூக்கமான நிலைப்பாட்டை நிரூபிக்கிறது.

அதே வேளையில் இதுபோன்ற நடவடிக்கைகள் இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும் வித்திடும் என்று டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset