நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைநகரில் பாலஸ்தீன ஒற்றுமை பேரணி 1 மில்லியன் பேர் திரள்வார்: சேகு முஹம்மத் அஸ்மி

கோலாலம்பூர்:

தலைநகரில் நடைபெறவுள்ள  பாலஸ்தீன ஒற்றுமை பேரணியில் 1 மில்லியன் பேர் திரள்வார்கள்.

இதனை மலேசிய இஸ்லாமிய அமைப்புகள் ஆலோசனை வாரியத்தின் தலைவர் சேகு முஹம்மத் அஸ்மி அப்துல் ஹமீத் உறுதிப்படுத்தினார்.

இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான பாலஸ்தீனத்தில் பேரழிவுகள் நடந்து வருகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்து வருகின்றனர்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என மலேசியர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தலைநகரில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்படவுள்ளது.

இந்த பேரணி வரும் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.

காசாவில் போரை நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது.

இந்தப் பேரணியில் கிட்டத்தட்ட 1,000 அரசு சாரா இயக்கங்களில் பிரதிநிதிகள் கலந்து கொள்வர். 

ஆக மொத்தத்தில் 1 மில்லியன் மலேசியர்கள் இப் பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

குறிப்பாக இப்பேரணி தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கிச் செல்லும் என்று சேகு முஹம்மத் அஸ்மி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset