நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கார் வாங்கி எட்டு மணி நேரத்தில் பழுதடைந்தது; இந்திய இளம் பெண் ஆதங்கம் 

கோலாலம்பூர்: 

பெரோடுவா பெஸ்ஸா ரக காரை வாங்கிய ஓர் இந்திய இளம்பெண்ணுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரை வாங்கி எட்டு மணி நேரத்திற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கார் பழுதடைந்தது. இந்த சம்பவத்தை அடுத்து நாகக்கன்னி சுப்ரமணியம் எனும் அப்பெண் தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

கார் பழுதடைந்த நிலையிலும் கார் விற்பனையாளர்களிடமிருந்து உரிய பதில்கள் எதுவும் இதுவரை இல்லை. இருப்பினும், நாகக்கன்னி சுப்ரமணியம் மாதந்தோறும் 570 ரிங்கிட் பணத்தை செலுத்தி வந்தார் என்று அவர் குறிப்பிட்டார். 

காரை பரிசோதித்ததில் காரின் எஞ்ஜின் பழுதடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட எஞ்ஜினில் சர்க்கரை உள்ளதால் தான் காரின் எஞ்ஜின் பழுதடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தாம் எந்தவொரு உணவோ சர்க்கரையோ எடுத்து வரவில்லை, இருந்தும் புதிதாக வாங்கிய கார் எப்படி பழுதாகி இருக்கும் என்று தமக்கு தெரியவில்லை என்று வருத்ததுடன் குறிப்பிட்டார். 

புதிய கார் மாற்ற வேண்டும் என்றால் மீண்டும் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று கார் விற்பனையாளர் தெரிவித்தார். ஆனாலும் இந்த பரிந்துரையை நாகக்கன்னி சுப்ரமணியம் ஏற்க மறுத்தார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset