நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹனேடா விமான விபத்தைத் தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து

டோக்கியோ:

ஹனேடா விமான விபத்தை தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானமும் ஜப்பான் கடலோர காவல்படை விமானமும் மோதி விபத்துக்குள்ளாது.

இந்த விபத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 300க்கும் அதிகமானோர் பாதுகாப்பாக தப்பித்தனர்.

அதே வேளையில் ஜப்பான் கடலோர காவல்படை விமானத்தில் இருந்தை ஐந்து பேர் மரணமடைந்தனர்.

இந்த விபத்தால் ஹனேடா விமான நிலையத்தின் ஓடும் பாதைகள் பல மணி நேரங்கள் மூடப்பட்டன.

இதனால் 300க்கும் மேற்ப்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 4 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

தற்போது மீண்டும் அவ்விமான நிலையம் திறக்கப்பட்டாலும் இன்று 100 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset