நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிக்கு செல்ல அனுமதி தாருங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதிய மாணவி ஷிவானி

கோலாலம்பூர்:

அடுத்தாண்டு பள்ளி செல்ல எனக்கு அனுமதி தாருங்கள் என மாணவி ஷிவானி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சம்பந்தப்பட்ட 10 வயது மாணவியின் கடிதம் தற்போது சமூக வலைத் தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மாணவி ஷிவானி மூன்றாம் ஆண்டு வரை செனவாங் தாமான் ஸ்ரீ பாகி தேசியப் பள்ளியில் பயின்றுள்ளார்.

ஆனால் அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் புதிய பள்ளி தவணையில் ஷிவானி படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முறையான அடையாள ஆவணங்கள் இல்லாத காரணத்தால் ஷிவானியின் படிப்பை தொடர பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மாணவி ஷிவானி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

May be an image of diary and text

அடையாள அட்டை இல்லாததால் ஆசிரியர் என்னை பள்ளிக்கு வர வேண்டாம் என கூறி விட்டார்.

நான் பள்ளிக்கு செல்ல வேண்டும். நான் படிக்க வேண்டும். என் நண்பர்களை பார்க்க வேண்டும்.

ஆகவே அடுத்தாண்டு பள்ளிக்கு செல்ல பிரதமராகிய நீங்கள் எனக்கு உதவ வேண்டும் என அம்மாணவி உருக்கத்துடன் கடிதம் எழுதியுள்ளார்.

நான் திருமணம் செய்த போது அத் திருமணம் முறையாக பதிவு செய்யவில்லை.

கடந்த 2013ஆம் ஆண்டு மகள் ஷிவானி பிறந்தவுடன் என மனைவியும் நானும் பிரிந்து விட்டோம்.

இதனால் இப் பிரச்சினை எழுந்துள்ளது என்று அவரின் தந்தையான 44 வயது ராஜேஸ்வரன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset