நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கி மோசடியில் ஈடுபடும் வட்டி முதலை: கலைவாணர் காட்டம்

கோலாலம்பூர்:

வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கி வட்டி முதலை ஒன்று மோசடியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் போலீசாரின் நடவடிக்கை என்னவென்று டத்தோ கலைவாணர் கேள்வி எழுப்பினார்.

கிள்ளானில் உள்ள சீக்கிய ஆடவரிடம் கஷ்டக் காலத்தில் பணத்தை கடனாக வாங்கியுள்ளனர்.

வட்டிக்கு பணம் வாங்கிய அவர்களிடம் சம்பந்தப்பட்ட ஆடவர் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார்.

கஷ்டமான நேரத்தில் பணம் மட்டுமே தேவை என்பதால் இவர்களும் கையெழுத்தை போட்டுக் கொடுத்துள்ளனர்.

இவர்களின் கையெழுத்தை வைத்து தமக்கு தேவையானதை பூர்த்தி செய்துகொண்ட சம்பந்தப்பட்ட ஆடவரை அக் கடிதத்திற்கு சத்தியப்பிரமாணமும் செய்துள்ளார்.

அதன் பின் வியாபாரம் செய்து பாதிக்கப்பட்டவர்கள்  மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்து ஏமாற்றியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்டு தற்போது புகார் செய்துள்ளனர்.

இன்னும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் முன்வந்து புகார் செய்ய வேண்டும்.

வட்டிக்கு பணம் வாங்கியவர்களுக்கு தெரியாமல் சத்தியபிரமானம் எடுப்பதும், வழக்கு தொடர்வதற்கும் யார் அனுமதி கொடுத்தது என்று எனக்கு தெரியவில்லை.

ஆகவே இந்த விவகாரத்திற்கு போலீஸ் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டத்தோ கலைவாணர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset