நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேட்டரிங் உணவு வராததால் சொந்தமாக சமைத்த குடும்பம்: புதுமண தம்பதியருக்கு 13,000 ரிங்கிட் இழப்பு

சிரம்பான்:

திருமணத்திற்கு ஆர்டர் செய்த உணவு வராததால் குடும்பத்தினர்  சொந்தமாக சமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தளப்பட்டனர்.

இச்சம்பவத்தால் புதுமண தம்பதியர் 13,200 ரிங்கிட்டை இழந்துள்ளனர்.

ஜெம்பூல் வட்டாரத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு உரிய ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றது.

விருந்தினர்கள் திரளாக வந்ததுடன் திருமணமும் சிறப்பான முறையில் நடந்தது.

ஆனால் திருமணத்திற்காக ஆர்டர் செய்த கேட்டரிங் உணவும் மட்டும் இறுதிவரை வரவே இல்லை.

1,000 பேருக்கான உணவு உட்பட அனைத்து ஏற்பாடுகளுக்காகவும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் 13,200 ரிங்கிட்டை புதுமண தம்பதியர் செலுத்தி  உள்ளனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட கேட்டரிங் நிறுவனம் உணவுடன் அங்கு வரவில்லை. பல முறை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து நாங்களே 400 பேருக்கு சமைத்து  உணவு வழங்கினோம். எங்களால் முடிந்ததை சமைத்தோம்.

இந்த விவகாரம் தொடர்பில் பண்டார் ஸ்ரீ ஜெம்பூல் போலீஸ் தலைமையகத்தில் புகார் ஒன்றையும் பதிவு செய்துள்ளோம் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பர்ஹானுடின் ரபானி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset