நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

4 மாநிலங்களில் வெள்ளப் பேரிடர்: 18,735 பேர் பாதிப்பு

கோலாலம்பூர்:

நான்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடரில் இதுவரை 18,735 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் கனமழையைத் தொடர்ந்து நாட்டின் நான்கு மாநிலங்களில் வெள்ளப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

கிளந்தான், திரெங்கானு, பகாங், சிலாங்கூர் ஆகிய மாநிலங்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு மாநிலங்களிலும் 199 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

இம்மையங்களில் 18,735 பேர் தங்கியுள்ளனர்.

கிளந்தான் மாநிலத்தில் ஆக அதிகமாக 11,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3,444 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் 72 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

திரெங்கானுவில் 6,724 பே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,791 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் 110 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

பகாங் மாநிலத்தில் 187 குடும்பத்தைச் சேர்ந்த 791 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் கோல லங்காட் மாவட்டத்தில் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset