நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு விடப்படும் வணிகர்களின் உரிமம் ரத்துச் செய்யப்படும்: டாக்டர் ஸலிஹா

பெட்டாலிங் ஜெயா:

வணிக விதிமுறைகளை மீறி வெளிநாட்டினருக்கு வாடகைக்கு விடும் வர்த்தகர்களின் உரிமங்களைக் கோலாலம்பூர் மாநகர மன்றம் ரத்து செய்யும் என்று பிரதமர் துறைக்கான கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நேற்று கோலாலம்பூரிலுள்ள ஜாலான் சிலாங்கில் காவல்துறையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அவர் இவ்வாறு கூறினார்.

வர்த்தகர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும், வணிகங்களை நடத்த வெளிநாட்டவர்களுக்கு வாடகை விடக் கூடாது என்றார் அவர்.

இந்த நடவடிக்கை மற்ற இடங்களிலும் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

கூட்டரசப் பிரதேசத்திலுள்ள முக்கிய வணிக இடங்களில் சட்டவிரோத வெளிநாட்டு வர்த்தகர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது கோலாலம்பூர் மாநகர மன்றத்தின் முதன்மை பணிகளில் ஒன்றாகும்.

நேற்று, இரண்டு குழந்தைகள் உட்பட 1,101 ஆவணமற்ற வெளிநாட்டினரைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில் 104,000 வெள்ளி மதிப்புள்ள கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

"Op Khas" சோதனையானது, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத வணிகங்கள் மீது கவனம் செலுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாமும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset