நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கில் 120,000 குடும்பங்கள் தண்ணீரை சேமிக்க உத்தரவு

ஜார்ஜ்டவுன்:

பினாங்கில் 120,000 குடும்பங்கள் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு பினாங்கு நீர் சேவை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பினாங்கு தென்மேற்கு மாவட்டத்தின் மிகப் பெரிய குழாய் ஒன்று உடைந்துள்ளது.

இந்த குழாயை சீரமைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை இரவு  தொடங்கப்பட்டு நேற்று இரவுக்குள்  நிறைவடைந்திருக்க வேண்டும். 

ஆனால் சாதகமற்ற வானிலை, உயர் அலைகள் காரணமாக இப்பணிகள்  தாமதமாகின.

மேலும் குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் உடைத்த குழாய் முழுமையாக சீரமைக்க வேண்டும்.

ஆகவே, தென்மேற்கு மாவட்டத்தில் உள்ள 120,000 குடும்பங்கள் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை அவர்கள் தண்ணீரை சேமித்துக் கொள்ள வேண்டும் என்று வாரியத்தின் தலைமை இயக்குநர் கே. பத்மநாதன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset