செய்திகள் மலேசியா
மலேசியர் என்ற உணர்வால் ஒன்றுபடுவோம்: தலைமையாசிரியர் ராஜம்மாள்
ஈப்போ:
பல இனம், சமயத்தவர்கள் வாழும் இந்த அற்புதமான நாட்டில் இளம் வயதிலிருந்தே நாம் அனைவரும் மலேசியர்கள் என்ற உணர்வை பள்ளி பருவத்திலேயே புகட்டவேண்டும்.
பேரா, கோலகங்சார் மாவட்டத்தில் உள்ள சுங்கை சிப்புட் டோவன் பி தோட்டத் தமிழ்பள்ளியில் நடைபெற்ற ஒருமைப்பாட்டு நிகழ்வு கொண்டாட்டத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் ராஜம்மாள் வீராசாமி இதனை வலியுறுத்தினார்.
அனைவரையும் ஒன்றிணைக்கும் மனிதச் சங்கிலியாக ஒருமைப்பாடு திகழ்கின்றது. இதனையே பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் எனப் பாடியுள்ளார்.
சாதி, மத, இன மற்றும் மொழி வேறுபாடுகளை நீக்கும் வழிமுறைகளை ஒவ்வொரு மாணவனும் தன் பள்ளி பருவத்திலேயே தொடங்கினால் நாடு தானாக மாறி முன்னேற்றமடையும்.

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே என்ற உணர்வை வளர்கின்ற ஒவ்வொரு மாணவனும் பெறவேண்டும்.
இந்த நாட்டில் மதத்தால், மொழியால், இனத்தால் பழக்கவழக்கத்தால் வேறுபட்டவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் எண்ணம், சொல், செயலால் ஒன்றுபட்டு விளங்கினால் தான் ஒன்றுபட்ட மலேசியாவைக் காண முடியும்.
இன்றைய மாணவர்களே நாளைய ஆட்சியாளர்கள். எனவே மாணவர்களிடம் ஒருமைப்பாட்டு உணர்வு அவசியம். அதனை வளர்ப்பதில் அவர்களின் பங்கு மகத்தானதாகும் என்றார்.
சுங்கை சிப்புட் வட்டாரத்தில் உள்ள மூன்று சீனப் பள்ளிகளும், மூன்று தேசிய பள்ளிகளும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
கலந்து கொண்ட மாணவர்கள், அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பல்லின கலாச்சார ஆடையில் வந்தது இந்நிகழ்வினை மேலும் மெருகூட்டியது.
கோலக்கங்சார் மாவட்ட துணை கல்வி அதிகாரி அஹயான் சிறப்பு வருகை புரிந்து அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 5:22 pm
உயர் கல்வி கனவை பெர்டானா பல்கலைக்கழகம் நனவாக்குகிறது: மாணவார்கள் பெருமிதம்
December 7, 2025, 2:15 pm
பேரா அவுலோங் ஸ்ரீ மகா சிவாலயத்தின் மகா கும்பாபிஷேக விழா: விமரிசையாக நடைபெற்றது
December 7, 2025, 1:44 pm
ஆசிய கல்வி விருது விழாவில் சிறந்த மருத்துவ கல்வி சேவைக்கான விருதை பியோன்ட் மலேசியா வென்றது
December 7, 2025, 1:25 pm
சிரம்பான் சென்ட்ரல் டிரான்சிட் ஓரியண்டட் டெவலப்மென்ட் (TOD) அடிக்கல் நாட்டு விழா
December 7, 2025, 1:07 pm
நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு அங்கீகாரம்
December 7, 2025, 11:41 am
