நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சரவை மாற்றம் அம்னோவை புரட்டி போடுமா?

கோலாலம்பூர்:

அமைச்சரவை மாற்றம் அம்னோவை புரட்டி போடலாம் என்று பெயர் குறிப்பிட விரும்பாத தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்திற்கு மிகப் பெரிய பலமாக அம்னோ விளங்கி வருகிறது.

இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இதில் அம்னோவின் உயர்மட்டத் தலைவர்களை புதிய இலாகாக்களுக்கு மாற்றுவதில் எந்த நியாயமும் இல்லை.

மற்ற தலைவர்களின் இழப்பில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடியின் பிடியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த மறுசீரமைப்பில் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றிய அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசன் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

முன்னாள் உயர்க் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஸம்ரி அப்துல் காதிர் உயர்க் கல்வி அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிரதமர் அரசாங்கத்தில் தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஜாஹிட்டிடம் விவாதிக்காமல் அம்னோ தலைவர்களை புதிய இலாகாக்களுக்கு மாற்றியிருக்க வாய்ப்பில்லை.

ஜாஹிட்டை யாரும் மிஞ்சக் கூடாது என்பதற்காக கூட இந்த மாற்றங்கள் நடந்திருக்கலாம்.

ஆகவே இந்த அமைச்சரவை மாற்றம் அம்னோவில் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தலாம் என்று அத் தலைவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset