நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சர்கள் எல்லா இன மக்களுக்காகவும் பணியாற்ற வேண்டும்: சரவணக்குமார்

நீலாய்:

அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் எல்லா இன மக்களுக்காகவும் பணியாற்ற வேண்டும்.

இதன் மூலமே நாட்டில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று டிஎஸ்கே குழுவின் தலைவர் டத்தோ சரவணக்குமார் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஒற்றுமை அரசாங்கம் அமைந்துள்ளது.

கிட்டத்தட்ட ஓராண்டுகளுக்கு பின் பிரதமர் அமைச்சரவையில் திருத்தங்களை செய்துள்ளார்.

இதில் மனிதவள அமைச்சராக இருந்த சிவக்குமார் நீக்கப்பட்டார். அதே வேளையில் கோபிந்த் சிங் டியோ அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக தமிழ் பேசும் ஒருவர் முழு அமைச்சராக இல்லை என்ற ஏமாற்றம் சமுதாயத்திடையே எழுந்துள்ளது.

கோபிந்த் சிங் நியமனம் செய்ததில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், தமிழ் பேசக்கூடிய தமிழ் உணர்வுள்ள ஒருவர் அமைச்சராக பதவியேற்கவில்லையே என்பது அனைவருக்குமான அதிருப்தியாகும்.

குறிப்பாக இந்திய சமுதாயத்தின் பிரச்சினை எப்படி அமைச்சரவை கூட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

ஆகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் எல்லா அமைச்சர்களும் அனைத்து இனங்களுக்காகவும் பணியாற்ற வேண்டும்.

முதலில் பிரதமர் இந்த மனநிலைக்கு வர வேண்டும். ஓர் இனத்தை சார்ந்து அவரும், அமைச்சர்களும் வேலை செய்யக்கூடாது.

இதுவே எங்களின் கோரிக்கையாக உள்ளது என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset