நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா சட்டமன்றத் தேர்தலில் அம்னோ - வாரிசான் இணைந்து செயல்படும்: ஷாஃபி

கோத்தா கினபாலு:

சபா சட்டமன்றத் தேர்தலில் அம்னோ, வாரிசான் இணைந்து செயல்படும்.

வாரிசான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ  முகமத் ஷாஃபி அப்டால் உறுதிப்படுத்தினார்.

சபாவில் தற்போது ஜிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது.

இக்கட்சியை வீழ்த்தும் முயற்சியாக வாரிசானும் அம்னோவும் சட்டமன்றத் தேர்தலில் இணைந்து செயல்படவுள்ளது.

இப்புதிய ஒத்துழைப்பை மாநில அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ பூங் மொக்தாரும் ஒப்புக் கொண்டார்.

கடந்த காலங்களில் நாங்கள் இணைந்து பணியாற்றி உள்ளோம். இடையில் பிளவுகள் ஏற்பட்டது.

தற்போது மீண்டும் இணைவதில் எந்த சிக்கலும் எங்களுக்கு இல்லை.

குறிப்பாக சபா மக்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்ததாக ஷாபி அப்டால் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset