நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து கட்சி உறுப்பினர்கள் பிரதமருக்கு ஆதரவு அளித்ததற்கு லஞ்சம் காரணமல்ல: அசாலினா ஒத்மான்

பெட்டாலிங் ஜெயா:

பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு வளர்ச்சிக்கான ஒதுக்கீடுகளைப் பெறுவதற்கு பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர் ஆதரவளிப்பதாக அறிவித்ததை லஞ்சமாகக் கருத முடியாது என்று அசாலினா ஓத்மான் தெரிவித்துள்ளார்.

பிரதமர் முன் வந்து தமது ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டால் மட்டுமே அது லஞ்சமாகக் கருதப்படும் என்று பிரதமர் துறையின் சட்டம் சீர்திருத்தம் அமைச்சரான அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அன்வார் 149 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரதமராகிவிட்டார். அதனால் இந்த 5 பேரின் ஆதரவு தேவையற்றது என்றார் அவர்.

இதற்கிடையில், போலி செய்திகளைத் தடுக்க தற்போதுள்ள சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்று அசாலினா கூறினார்.

அத்தகைய சட்டங்களை மதிப்பாய்வு செய்ய, அனைத்துத் தரப்பையும் அழைக்க வேண்டும்.

போலிச் செய்திகளைத் தடுக்க மக்கள் சட்டத்தை மட்டும் நம்ப முடியாது. மாறாக தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அஸலினா கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset