நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெட்ரிகுலேஷன், பல்கலைக்கழகப் புகுமுக இருக்கைகள் இன அடிப்படையில் வழங்கப்படவில்லை: யூசோப் அப்டால்

கோலாலம்பூர்:

மெட்ரிகுலேஷன், பல்கலைக்கழகப் புகுமுக இருக்கைகள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

இந்தக் கல்வி திட்டத்தில் பயில்வதற்கான தேர்வு இனம் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என்று உயர்கல்வி துணை அமைச்சர் டத்தோ முகமது யூசுப் அப்டல் கூறினார்.

மெட்ரிகுலேஷன், பல்கலைக்கழகப் புகுமுக திட்டங்களுக்கான நுழைவுகள் இனம், மத ஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்படவில்லை.

மாறாக, இது கல்வித் தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

மலாய் அல்லாத மாணவர்கள் மெட்ரிகுலேஷன் திட்டத்தில் நுழைவது கடினம் என்ற புகார் குறித்த செனட்டர் டொமினிக் லாவ் ஹோ சாயின் கேள்விக்கு டத்தோ முகமது யூசுப் அப்டல் இவ்வாறு பதிலளித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset