நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக்கில் இன்னும் 1 மலேசியா கிளினிக்குகள் இயங்கி வருகின்றன: சிவநேசன்

ஈப்போ :

பேராக்கில் 1 மலேசியா கிளினிக்குகள் மூடப்படவில்லை. அந்த 18 கிளினிக்குகளும் இயங்கி வருகின்றன.

மாறாக, 1 மலேசியா கிளினிக்குகள் சமூக கிளினிக்குகள் என பெயர் மாற்றம் கண்டு இன்றும் இயங்கி வருகின்றன.

காய்ச்சல், இருமல், சளி போன்ற நோய்களால் பாதிக்கப்படும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாக மனித வளம், சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் கூறினார்.

மேலும், காயங்களுக்கு மருந்திடுவது, தையல்களைப் பிரிப்பது,நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமா போன்ற நிலையான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நோய்களுக்கான பின்தொடர்தல் சிகிச்சை போன்ற மிதமான சிகிச்சை முறைகள், அத்துடன் சுகாதார ஆலோசனைகளும் இங்கு வழங்குப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

பேராக்கில் 1மலேசியா கிளினிக் மூடப்பட்டதாக அல்லது செயல்படாமல் இருக்கின்றதா என்பதை அறிய விரும்பும் டாக்டர் ஹாஷிம் புஜாங் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் எழுப்பிய கேள்விக்குச் சிவநேசன் இவ்வாறு பதிலளித்தார்.

தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதார சேவைகளை வழங்கும் மூன்று சமூக கிளினிக்கள் இருப்பதையும் சிவநேசன் சுட்டிக் காட்டினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset