நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வேகமாக உருகும் இமயமலை: உதவ ஐ.நா. வலியுறுத்தல்

துபாய்:

புவி வெப்பமயமாத காரணத்தால் இமய மலையில் பனிப்பாறைகள் அபாய அளவில் உருகி வருகின்றன என்றும் இதனால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உடனடி உதவ வேண்டியது

அவசியம் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தினார்.
துபாயில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், பனிப்பாறைகள் உருகும் பிரச்னைக்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இமயமலையில் இருந்து உருவாகும் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 10 முக்கிய நதிகளை நம்பி, இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர்.

நேபாளத்தில் உள்ள பனி மூடிய மலைகள் கடந்த 30 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு பனியை இழந்துள்ளன. பசுமை இல்ல வாயுக்களால் ஏற்படும் மாசுபட்டால், புவி வெப்பமடைந்து வருவதன் நேரடி தாக்கத்தால் இது நிகழ்ந்துள்ளது.

இமயமலையில் பனிப்பாறைகள் அபாய அளவில் உருகி வருவதால் பேரழிவு ஏற்படக் கூடும்.
பருவநிலை மாறுபாட்டால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவ வளர்ந்த நாடுகளால் உறுதியளிக்கப்பட்டுள்ள நிதியை வழங்க வேண்டும்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset