நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகளவில் இந்திய வம்சாவளி மக்களை ஒருங்கிணைக்கும்  கோபியோ பணி போற்றுதலுக்குரியது: மனிதவள அமைச்சர் சிவக்குமார்

கோலாலம்பூர்:

உலகளவில் இந்திய வம்சாவளி மக்களை ஒருங்கிணைக்கும் மலேசிய கோபியோவின் பணி உண்மையிலேயே மிகவும் போற்றுதலுக்குரியது என்று மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் தெரிவித்தார்.

கோபியோவின் 25ஆவது ஆண்டு விழா மற்றும் கோபியோ அனைத்துலக வர்த்தக மாநாட்டுடன் இணைந்து கோபியோ இன்டர்நேஷனல் பிசினஸ் எக்ஸலன்ஸ் விருது விழா நேற்று புத்ரா உலக வாணிப மையத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

கோபியோ என்பது உலகம் முழுவதும் 35 மில்லியன் இந்திய வம்சாவளி மக்களைக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பாகும். 

உலகளவில் இந்திய வம்சாவளி மக்களை  வலையமைத்து  ஈடுபடுத்தும் அவர்களின் நோக்கம் பாராட்டுக்குரிய முயற்சியாகும். 

இரு தினங்களுக்கு நடைபெற்ற கோபியோ சர்வதேச வணிக உச்சநிலை மாநாடு, கோபியோவின் நெட்வொர்க்கிங் முயற்சியில் அவர்கள் பெற்ற வெற்றிக்கு ஒரு சான்றாகும்.

இந்த மாநாட்டிற்கு 15 நாடுகளின் பிரதிநிதிகளை ஈர்த்துள்ளது மிகப்பெரிய சாதனையாக உள்ளது.

எதிர்காலத்திற்கான பரஸ்பரத்தை மையமாகக் கொண்ட விவாதம் நிலையான வளர்ச்சிக்கான அடித்தளம் என்று நம்புகிறேன்.

இந்த மாநாட்டின் கருப்பொருளின்படி, நிலையான எதிர்காலத்தை நோக்கி வணிகத்தை கடப்பதாகும்.

தொடர்ந்து உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் எனது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று அவர் சொன்னார்.

துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, இந்தியாவின் கல்வி அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன், டத்தோ பி.சகாதேவன், மலேசியாவுக்கான இந்திய தூதர் ரெட்டி, இந்திய விஞ்ஞானி மயில்சாமி உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

கோபியோ தலைவர் குணசேகரன் தலைமையில் இந்த விழா விமரிசையாக நடைபெற்றது.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset