நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சந்திரயான் -1 திட்ட இயக்குனர் விஞ்ஞானி  மயில்சாமியுடன் அமைச்சர் சிவக்குமார் சந்திப்பு

கோலாலம்பூர்:

கோலாலம்பூரில் நடைபெறும் கோபியோ அனைத்துலக விருந்தளிப்பு விழாவுக்கு இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வருகை புரிந்துள்ளார் 

நேற்றிரவு புத்ரா உலக வாணிப மையத்தில் மெர்டேக்கா மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் இவர் கலந்து கொண்டார்.

இந்த விழாவுக்கு தலைமை தாங்கிய மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார், சிறப்பு பிரமுகர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நேரில் சந்தித்து உரையாடி மகிழ்ந்தனர்.

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நேரில் சந்தித்து உரையாடியது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.

 தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தற்போது இந்திய தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.

இந்தப் பொறுப்பை ஏற்கும் முன் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராகப் பணிபுரிந்தார். 

அந்த சமயம் முப்பதுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்கிய சாதனை இவரைச் சாரும்.

இவரே முதன் முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர்.

இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், கையருகே நிலா என்னும் தலைப்பில் தமது தொடக்க நாட்கள், சந்திரயான் பணி ஆகியவை குறித்து நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

சந்திரயான்-1 திட்டத்திற்காக மூன்று சர்வதேச விருதுகளை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset