நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடலில் காணாமல் போன 1,365 பேரை மலேசிய கடல்சார் அமலாக்க துறை மீட்டுள்ளது

பெட்டாலிங் ஜெயா :

இவ்வாண்டு முதல் பத்து மாதங்களில் கடலில் காணாமல் போன 1,365 பேரை மலேசிய கடல்சார் அமலாக்க துறை மீட்டுள்ளது.

1,487 மீட்பு நடவடிக்கைகளில் மலேசிய கடல்சார் அமலாக்க துறை 1,365 பேரைப் பத்திரமாகக் காப்பாற்றியுள்ளது.

கடல் மாசுபாட்டைத் தடுப்பதில் கடல்சார் அமலாக்க நிறுவனம் காட்டி வரும் தீவிர அக்கறையை இந்த நடவடிக்கை புலப்படுத்துகின்றது என்று மலேசிய கடல்சார் தலைமை இயக்குநர் லக்ஸ்மணா மெரித்திம் டத்தோ ஹமிட் முகமது அமின் கூறினார்.

இக்காலக்கட்டத்தில் 154,463 சோதனை, தேடல் நடவடிக்கைகளை மலேசிய கடல்சார் அமலாக்க துறை மேற்கொண்டுள்ளது.

மேலும், பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 1,114 பேரையும் மலேசிய கடல்சார் அமலாக்க துறை கைது செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழலின் நீடித்த பாதுகாப்பை உறுதி செய்ய மாசுபாட்டிலிருந்து கடல் பகுதி விடுபட்டிருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையிலும்  மலேசிய கடல்சார் அமலாக்க துறை முழுமையாக ஈடுபட்டு வருகிறது என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset