நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

10,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய  Panasonic நிறுவனம் திட்டம்

தோக்கியோ:

ஜப்பானின் பிரபல மின்னியல் நிறுவனமான Panasonic உலகம் முழுவதும் 10,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. 

ஊழியர்களிடையே உற்பத்தித்திறனை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுறது.

நிறுவனம் செயல்படத் தேவையான ஊழியர்களின் எண்ணிக்கையை மறுஆய்வு செய்யப்போவதாக Panasonic கூறியது.

ஜப்பானில் 5,000 ஊழியர்களும் மற்ற நாடுகளில் 5,000 ஊழியர்களும் குறைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிறுவனத்தில் சுமார் 230,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அதில் சுமார் 4 விழுக்காட்டு ஊழியர்களைக் குறைக்க நிறுவனம் திட்டமிடுகிறது.

அடுத்த மார்ச்சில் நிதியாண்டு நிறைவடையும்போது அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நிறுவனம் கூறியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset