நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலானில் எந்தப் பிரிவுகளும் இல்லை; அன்வார் அணி மட்டுமே உள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

கெஅடிலானில் எந்தப் பிரிவுகளும் இல்லை. தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் அணி மட்டுமே உள்ளது.

தொழில் முனைவோர் மேம்பாடு  கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை கூறினார்.

2025-2028 கெஅடிலான் கட்சித் தேர்தல்களில் முக்கியப் பதவிகளுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

இதனால்  அணி, பிரிவு தொடர்பான பல கேள்விகள் எழுந்துள்ளது.

26 ஆண்டுகால கட்சிக்கு ஒரே ஒரு அணி மட்டுமே உள்ளது. அது கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அணியாகும்.

துணைத் தலைவர் பதவிக்கு கட்சியில் இரண்டு பெரிய நபர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் என்றாலும், 

அவர் பதவிக்காலம் முடியும் வரை கட்சியின் முதன்மைத் தலைவராக இருப்பார்.

முன்னதாக கெஅடிலானில் இரண்டாவது குழு என்று கூறிக் கொண்ட நபர்கள் இருந்தனர்.

மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் கோஷ்டிவாதத்தை உருவாக்குவதால் அது நிறுத்தப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்

நேற்று பினாங்கின் பட்டர்வொர்த்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனை கூறினார்.

கெஅடிலான் துணைத் தலைவர் பதவியை நிரப்ப டத்தோஸ்ரீ ரபிசி ரம்லியை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக நூருல் இசா அன்வார் அறிக்கை வெளியிட்டார்.

இது பிளவை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஆனால் கட்சித் தேர்தல்கள் எந்தவொரு வெறுப்பு அல்லது தூண்டுதலும் இல்லாமல் ஒரு பெரிய குடும்பமாக ஆரோக்கியமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset