நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிகேஆர் கட்சியின் தலைவர் பதவிக்குப் பிரதமர் அன்வார் போட்டியின்றித் தேர்வு

கோலாலம்பூர்:

பிகேஆர் கட்சியின் தலைவர் பதவிக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் போட்டியின்றித் தேர்வாகியுள்ளார். 

வேட்பு மனுத்தாக்கல் நேற்றிரவு 11.59 மணிக்கு நிறைவடைந்த நிலையில் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு பிரதமர் அன்வார் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுள்ளார்.

கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு நடப்பு துணைத் தலைவரும் பொருளாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ ரஃபிசி ரம்லி, நுருள் இசா அன்வார் ஆகியோரிடையே நேரடிப் போட்டி நிலவுவதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கு மொத்தம் 12 பேர் தங்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

 - அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset