நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

MYExpo Dili 2025 மலேசியா, திமோர் லெஸ்தே இடையிலான பொருளாதார, கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும்: மைஇவெண்ட்ஸ் நிறுவனம்

டிலி:

MYExpo Dili 2025 மலேசியா, திமோர் லெஸ்தே இடையிலான பொருளாதார, கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.

MYExpo Dili 2025 நேற்று டிலி மாநாட்டு மையத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

இது மலேசியாவிற்கும், திமோர் லெஸ்தேவிற்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, கலாச்சார பரிமாற்றம், இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது.

டிலியில் உள்ள மலேசிய தூதரகத்துடன் இணைந்து மைஇவெண்ட்ஸ் நிறுவனம் இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

ஆசியானுக்கு மலேசிய தலைமையேற்றதுடன், 2026 மலேசிய வருகையாளர் ஆண்டு  பிரச்சாரத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

MYExpo Dili 2025, புதுமை, வர்த்தகம், பிராந்திய ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு தொழில்துறை தலைவர்கள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைக்கும் ஒரு தளத்தை வழங்கி உள்ளது.

இவ்விழாவில் Weststar Aviation Services, Redstar Global Timor Lda, Golden River Universe Lda, Everworks Timor-Leste Lda, MetroLink, Timor Lodge Hotel & Residence, Telkomcel ஆகிய முன்னணி நிறுவனங்களும் பங்கெடுத்துள்ளன.

மைஇவென்ட்ஸ் இன்டர்நேஷனலின் வணிக மேம்பாட்டு இயக்குநர் டைலன் முகமது வரவேற்பு உரையுடன் இவ்விழா தொடங்கியது.

அதைத் தொடர்ந்து திமோர் லெஸ்தேவுக்கான மலேசிய தூதர் டத்தோ அமர்ஜித் சர்ஜித் சிங்கின் உரை ஆற்றினார்.

திமோர் லெஸ்தே துணைப் பிரதமரும் பொருளாதார விவகாரங்கள், சுற்றுலா, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு அமைச்சருமான டத்தோ ஸ்ரீ பிரான்சிஸ்கோ கல்புவாடி உரையாற்றினார்.

மேலும் இரண்டு நாட்கள் கண்காட்சியில் மலேசியாவைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.

கல்வி, பொறியியல், விமானப் போக்குவரத்து, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset