நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விசாகத் தினத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச ஃபெரி சேவை

ஜார்ஜ் டவுன்: 

மே 12 ஆம்-தேதி கொண்டாடப்படும் விசாகத் தினத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச ஃபெரி சேவை வழங்கப்படும் என்று பினாங்கு துறைமுக ஆணையமும் (SPPP) பினாங்கு துறைமுக நிறுவனமும் (PPSB) அறிவித்துள்ளன.

Pangkalan Sultan Abdul Halim-லிருந்து Pangkalan Raja Tun Uda செல்லுவதற்கான இருவழி பயணச் சேவைக்கு அன்று கட்டணம் வசூலிக்கப்படாது என்று பினாங்கு துறைமுக ஆணையத் தலைவர் Datuk Yeoh Soon Hin தெரிவித்தார். 

Pangkalan Sultan Abdul Halim-லிருந்து முதல் ஃபெரி சேவை காலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணிக்கு நிறைவடையும்.

அதேபோல், Pangkalan Raja Tun Uda-விலிருந்து முதல் ஃபெரி சேவை காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 11.30 மணிக்கு நிறைவடையும் என்று அவர் கூறினார்.

பொதுமக்கள் தங்கள் பயணத்தை ஃபெரி சேவைக்கான அட்டவணையைச் சரி பார்த்து முன்கூட்டியே திட்டமிடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சாலையில் போக்குவரத்து நெரிசனை குறைக்க இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக Datuk Yeoh Soon Hin குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset