நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்டாலிங் ஜெயா, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 57-ஆவது சித்திரை தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது

பெட்டாலிங் ஜெயா:

பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 57-ஆவது சித்திரை தீமிதி திருவிழா, ஆன்மிகம் மற்றும் பக்தி பூர்வமான சூழ்நிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையான  மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார், விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

காலை 9 மணிக்கு, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் ஏந்தி, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

விழாவின் முக்கிய அங்கமாகத் தீமிதி, மதியம் 1 மணிக்கு ஆரம்பமாகி, 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதியில் இறங்கி நடந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

ஆலயத் தலைவர் அரிச்சந்திரன் வழங்கிய தகவலின்படி, இன்று மாலை 6 மணிக்கு ஆலயத்திலிருந்து தேர் ஊர்வலம் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை ஆலயத்தையே வந்தடையும்.

விழாவின் ஒரு பகுதியாக, 3,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்பட்டதாக ஆலயச் செயலாளர் முரளி முனுசாமி தெரிவித்தார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளாக ஆலயத்தில் நடைபெற்று வரும் தேவார வாய்ப்பு, சிலம்பம், பரதநாட்டியம், கோலாட்டம் மற்றும் மிருதங்க பயிற்சிகள் தொடர்ந்து எதிர்காலத் தலைமுறைக்கு ஆன்மிக பண்பாட்டைச் சார்ந்த பயிற்சி வழங்கி வருவதை டத்தோ சிவக்குமார் பாராட்டினார்.

விழாவில் அவருக்குப் பக்தர்கள் உற்சாக வரவேற்பும், மரியாதையும் வழங்கினர்.\

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset