நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 மலேசியாவிற்கு வருகை புரியும்: ஆசிய சுற்றுப்பயணிகள் TNG eWallet  கியூஆர் குறியீடு மூலம் கட்டணம் செலுத்தலாம்

கோலாலம்பூர்: 

ஆசியான் நாடுகளிலிருந்து மலேசியாவிற்கு வரும் சுற்றுப்பயணிகள், இங்குள்ள அனுமதி பெற்ற வணிகத் தளங்களில் கியூஆர் குறியீடு மூலம் கட்டணம் செலுத்த ‘TNG eWallet- செயலியில் பதிந்துகொள்ளலாம்.

2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், புருணை, கம்போடியா, இந்தோனீசியா, லாவோஸ், மியன்மார், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோருக்கு இது பொருந்தும்.

பொதுவாக ஏடிஎம் அட்டை மூலம் கட்டணங்களை ஏற்காத உணவங்களில் கட்டணம் செலுத்த இந்த நடவடிக்கை உதவும் என ‘டச் அண் கோ டிஜிட்டல்’ கூறியது.

‘டச் அண் கோ இ-வாலட்’ செயலிக்குப் பதிந்துகொண்டோர், தங்கள் சொந்த நாட்டில் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் அல்லது பற்று அட்டைகளைக் கொண்டு அச்செயலியில் பணம் செலுத்திக் கொள்ளலாம். .

சரிபார்ப்புக் குறியீடுகள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் என்பதால், செயலியில் பதிந்துகொள்ள அவர்கள் மலேசிய கைப்பேசி எண்ணைப் பயன்படுத்த தேவையிராது.

இந்நிலையில் சீனா, தென்கொரியா, ஹாங்காங், தைவான், ஜப்பான் உள்ளிட்ட ஆசியான் நாடுகள் அல்லாத மற்ற சந்தைகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படும்.

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset