நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளத்தால் தேர்வு எழுத வர இயலவில்லையென்றால் உடனடியாகத் தெரிவிக்கவும் : ஃபட்லினா சிடேக்

ஜொகூர் பாரு:

நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்மாதம் படிவம் 5 பயிலும் மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வினை எழுதவிருக்கின்றனர்.

மாணவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க கல்வியமைச்சு பல முன் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகக் கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு வேளை வெள்ள நிலைமை மோசமடைந்தால் தேர்வு எழுதும் மையயங்களை மாற்றுவதற்கும் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், வெள்ளம் காரணமாக நியமிக்கப்பட்ட தேர்வு எழுதும் மையத்திற்கு மாணவர்கள் செல்ல இயலாவிடின், உடனடியாக பள்ளி அல்லது மாநிலக் கல்வித் துறைக்குத் தெரிவிக்குமாறு ஃபட்லினா கேட்டுக் கொண்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset