நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2024 ஆண்டில் எச்ஆர்டி கோர்ப்பின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்: அமைச்சர் சிவக்குமார்

கோலாலம்பூர்:

மனித மூலதன வளர்ச்சிக்கு கடந்த மூன்று தசாப்தங்களாக, எச்ஆர்டி கோர்ப் மலேசியாவில் முக்கிய பங்கு வகித்துள்ளது என்று மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் தெரிவித்தார்.

எச்ஆர்டி கோர்ப்பின் 30ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்றிரவு கோலாலம்பூர் மைக்டெக் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் சிவக்குமார் உரையாற்றினார்.

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோ வீரா சாகுல் டாவூட் தலைமையில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கி அமைச்சர் சிவக்குமார் கெளரவித்தார்.

எச்ஆர்டி கோர்ப்பின் 30ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.

எச்ஆர்டி கோர்ப்பின் ஆரம்பகால பயணம் மற்றும் அதன் நீண்ட கால நம்பகத்தன்மைகள் மிகவும் பாராட்டுக்குரியவை.

நாட்டின் திறமையான மனித மூலதனத்தை  உருவாக்குவதில் எச்ஆர்டி கோர்ப் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறது.

இந்த தருணத்தில் 2023 ஆம் ஆண்டு மிகவும் வெற்றிகரமான ஆண்டாக  எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்திற்கு அமைந்துள்ளது.

May be an image of 5 people, flute, dais and text that says "RASHID HRD CORP DINNER 2023 2023 HEROES ASSEMBLE LUCKDR LUCKY DRAW DYSON DIGITAL SLIM PRO"

வரும் 2024 ஆம் ஆண்டிலும் இதன் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.

அற்புதமான இந்த ஆண்டு  மத்தியில் எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் வெற்றிகளில் ஆறு சிறந்தவை அடங்கும்.

மிகப்பெரிய அனைத்துலக தேசிய மனித மூலதன மாநாடு, கண்காட்சியை நடத்தி உள்ளது. 

இது தவிர்த்து  எச்ஆர்டி கோர்ப் பல விருதுகளையும் வென்று சாதனை படைத்துள்ளது.

இனிவரும் ஆண்டுகளிலும் எச்ஆர்டி கோர்ப் சாதனைகள் தொடர வேண்டும் என்று மனிதவள அமைச்சர் சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset