நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் சிம் கார்டு வாங்க புதிய விதிமுறைகள்: மீறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்

புது டெல்லி:

இந்தியாவில் செல்போன்களுக்கு சிம் கார்டுகளை வாங்குவதற்கான புதிய விதிகள் டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தன. KYC விவரங்களை வாடிக்கையாளர்கள் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பழைய சிம் கார்டுகளை மாற்ற புதிய கார்டு வாங்கினாலும் இந்த நடைமுறை பொருந்தும். அதிக எண்ணிக்கையில் சிம் கார்டுகள் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்குகள், கடன் அட்டைகளில் இருந்து பணத்தை பறிக்கும் மோசடியாளர்கள் செல்போன்கள் மூலம் மோசடிகளில் ஈடுபடுவதால் அவர்களின் கைகளில் சிம் கார்டுகள் செல்லாமல் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு கைப்பேசி எண் கைவிடப்பட்டால், அதே எண் 90 நாள்களுக்குப் பிறகுதான் மற்றொரு நபருக்கு வழங்கப்படும்.

ஒருவர் ஒரு அடையாள ஆவணத்தைப் பயன்படுத்தி 9 சிம் கார்டுகளை வரை வாங்கலாம் என்ற நடைமுறையில் மாற்றம் செய்யப்படவில்லை.

விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset