நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நித்யானந்தாவின் கைலாசா நாட்டுடன் கையெழுத்திட்ட பராகுவே அமைச்சின் உயரதிகாரி நீக்கம்

அசுன்சியோன்:

நித்யானந்தாவின் இல்லாத நாட்டுடன் இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்ட பராகுவேவைச் சேர்ந்த அரசாங்க அமைச்சின் உயரதிகாரி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பராகுவேயின் வேளாண் அமைச்சில் பணிபுரிந்த ஆர்னால்டோ சாமொர்ரோ (Arnaldo Chamorro) கைலாசா (United States of Kailasa) என்ற கற்பனை நாட்டின் பிரதிநிதிகளுடன் இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டார். 

கைலாசா நாடு உலகின் ஒரே இந்து நாடு என்றும் அறிவிக்கப்பட்டது. 

இந்தியாவில் பல குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வரும் நித்யானந்தாவின் கற்பனை நாடு கைலாசா என்று கூறப்படுகிறது.

நித்யானந்தா தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்று The Guardian செய்தி நிறுவனம் கூறியது.

Where is Nithyananda's 'fictional country' Kailasa? | Mint

கைலாசா பிரதிநிதிகள் சாமொர்ரோவையும் பராகுவேயின் வேளாண் அமைச்சரையும் சந்தித்தனர்.

அவர்கள் பராகுவேவிற்கு உதவுவதாகச் சொன்னதால் கையெழுத்திட்டதாக சாமொர்ரோ குறிப்பிட்டார்.

கைலாசா பிரதிநிதிகள் மற்ற நாடுகளை ஏமாற்றுவது இது முதல்முறை அல்ல என்றது The Guardian நாளேடு.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் கைலாசா பிரதிநிதிகள் ஐக்கிய நாட்டுச் சந்திப்பில் எப்படியோ கலந்துகொண்டுவிட்டதாகவும், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் உள்ளூர்த் தலைவர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகவும் The Guardian கூறியது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset