நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலாவுக்குச் செல்லும் அமெரிக்கா 

வாஷிங்டன்: 

50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமெரிக்கா தலைமையிலான நாசா குழுவினர் நிலாவுக்குச் செல்கின்றனர்.

இறுதியாக அப்போலோ மிஷன் மூலமாக நிலாவுக்குச் சென்ற அமெரிக்கா, மீண்டும் இந்த நிலாவுக்குச் செல்லும் பணியை முன்னெடுத்துள்ளனர். 

அடுத்தாண்டு ஜனவரி 25ஆம் தேதி இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PEREGRINE என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் நாசாவின் உபகரண பொருட்களை நிலாவுக்குச் சுமந்து செல்லும். அங்கே நிலாவில் அதன் மேற்பரப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலாவுக்கு செல்லும் திட்டம் என்பது சில மிஷன்கள் மட்டுமே வெற்றிக்கண்டுள்ளது. இருந்தும் இந்த முறை அமெரிக்கா அதன் நிலாவுக்கான பயணத்தின் முயற்சியை மேற்கொள்ளும் என்று இந்த திட்டத்தின் இயக்குநர் தொர்ந்தென் கூறினார். 

முன்னதாக, கடந்த 1969ஆம் ஆண்டு அமெரிக்கா நிலாவுக்கு மனிதர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. அந்த மிஷனுக்கு APPOLLO 11 என்று பெயரிடப்பட்டிருந்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset