
செய்திகள் உலகம்
திருச்சி JMC முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் 52ஆவது அமீரக தேசிய தின விழா கொண்டாட்டமும் ஒன்றுகூடலும்
அஜ்மான்:
அஜ்மானில் உள்ள ஹீலியோ பூங்காவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் சார்பில் 52ஆவது அமீரக தேசிய தின விழா கொண்டாட்டமும் ஒன்றுகூடலும் 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்புடன் நடந்தது.
இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் கே. நவாஸ் கனி எம்.பி. சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார்.
நாகூர் அமீர் அலி இறைவசனங்களை ஓத கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் கம்பம் பீ.மு. மன்சூர் தலைமையுரை நிகழ்த்தினார்.
பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் கே. நவாஸ் கனி எம்.பி. தனது உரையில் அமீரகத்தின் 52 வது தேசிய தின கொண்டாட்டத்தை உற்சாகமாக கொண்டாடி வரும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
"மேலும் கல்லூரியின் நிறுவனர்கள் ஜமால் முஹம்மது ராவுத்தர், காஜாமியான் ராவுத்தர் உள்ளிட்டோர் சமுதாயக் கல்விக்காக ஏற்படுத்திய திட்டத்தால் பலர் பயனடைந்து வருகின்றனர். இத்தகையதொரு நிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமையளிக்கிறது. முன்னாள் மாணவர் சங்கத்தின் கல்விப் பணிகள், கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை தங்கு தடையின்றி தொடர எனது ஒத்துழைப்பு இருக்கும்" என்றார்.
ஈரோடு எம்.கே. ஜமால் முஹம்மது எழுதிய திப்புசுல்தான் குறித்த கையேட்டை நவாஸ் கனி எம்.பி. வெளியிட்டார்.
மன்னர் மன்னர் நன்றியுறை நிகழ்த்தினார். சங்க துணைத் தலைவர் முதுவை ஹிதாயத் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.
- முதுவை ஹிதாயத்
தொடர்புடைய செய்திகள்
April 5, 2025, 12:16 pm
தாத்தாவின் சாம்பலைத் தெரியாமல் சாப்பிட்ட சிறுவன்
April 5, 2025, 10:12 am
மெக்சிகோவில் எச்5என்1 நோய் தொற்றால் முதல் நபர் பாதிக்கப்பட்டார்
April 4, 2025, 5:55 pm
தென்கொரியாவில் இரண்டு டன் எடையில் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்
April 4, 2025, 5:31 pm
அரிசியைவிட சிறிய அளவிலான ‘பேஸ்மேக்கர்’ கண்டுபிடிப்பு
April 4, 2025, 3:09 pm
39 மணி நேரத்திற்கு மேல் துருக்கி தியர்பாகிர் விமான நிலையத்தில் மாட்டிக் கொண்ட பயணிகள்
April 4, 2025, 10:26 am
மியான்மர் நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை 3,145 ஆக உயர்வு
April 3, 2025, 5:45 pm
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பால் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு
April 3, 2025, 5:41 pm
குயின் மேரி 2 சொகுசு கப்பலில் பரவிய 'நோரோ' வைரஸ் தொற்று: 250 சுற்றுலா பயணிகள் பாதிப்பு
April 3, 2025, 5:39 pm