நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மலேசியாவின் ஹலால் தொழிற்துறையின் மகத்துவம்: துருக்கியில் வெளிப்படும்

கோலாலம்பூர்: 

பத்தாவது ஹலால் கண்காட்சி துருக்கி நாட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் சூழலில் மலேசியாவின் ஹலால் தொழிற்துறை தொடர்பான தகவல்கள், கண்காட்சிகள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.

THE MALAYSIA SHOWCASE PAVILLION அனைத்து முதலீட்டாளர்களையும் ஹலால் நிறுவனங்களையும் வர்த்தக உதவியாளர்களை தங்களின் வணிக த்திற்கான வழிகளை இக் கண்காட்சியின்வழி திறந்துள்ளது.

இந்த கண்காட்சியை துருக்கி நாட்டிற்கான மலேசிய உயர் ஆணையர் தெங்கு முஹம்மத் ஸராய்ஃப் ராஜா அப்துல் காதிர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். 

ஹலால் கண்காட்சியில் மலேசியாவின் பங்கு என்பது  குறித்து அ யூரோ-ஆசியா வணிக தொடர்புகளை பறைசாற்றும் விதமாக இந்த THE MALAYSIA SHOWCASE PAVILLION அமைவதாக அவர் சொன்னார். 

இந்த கண்காட்சியின் மூலம் மலேசிய ஹலால் தொழிற்துறையும்  சிறு குறு நடுத்தர வியாபாரிகள் SME தங்களின் வியாபார ஒத்துழைப்பினை வலுப்படுத்திக்கொள்ள முடியும். அத்துடன் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தங்களின் சந்தையை விரிவுப்படுத்தவும் ஏதுவாக இருக்கும் என்று அவர் கருத்துரைத்தார். 

ஹலால் தொழிற்துறையினால் பல்வேறான தொழில் வாய்ப்புகளை நாம் உருவாக்கிட முடியும் என MATRADE ஆணையர் துவான் ஸஹிருடின் கூறினார். 

THE MALAYSIA SHOWCASE PAVILLION க்கு MY EVENTS INTERNATIONAL நிறுவனம் ஆதரவு வழங்கியுள்ளது. மலேசியாவிலிருந்து சுமார் 31 கண்காட்சியாளர்களை இந்த 10ஆவது துருக்கி ஹலால் கண்காட்சிக்கு கொண்டு சென்றது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset