நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வியாளர் நாராயணசாமிக்கு எல்எல்ஜி தன்முனைப்பு விருது: திரவியம்

கோலாலம்பூர்:

நாட்டில் புகழ் பெற்ற கல்வியாளர் நாராயணசாமிக்கு எல்எல்ஜி தன்முனைப்பு விருது வழங்கப்படவுள்ளது.

இதனை தமிழ் அறவாரியத்தின் தலைவர் திரவியம் மருதை தெரிவித்தார்.

மறைந்த லிம் லியன் கியோங் கல்வி, மொழி  வளர்ச்சிக்கு பெருமளவில் பாடுப்பட்டுள்ளார்.

குறிப்பாக தாய் மொழியை பாதுக்காக்க போராடிய அவரின் குடியுரிமை கூட பறிக்கப்பட்டுள்ளது.

மறைந்து மக்களின் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவரின் பெயரில் கலாச்சார மேம்பாடு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையம் மொழி வளர்ச்சிக்கும் சமுதாய மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு லிம் லியன் கியோங் தன்முனைப்பு விருதை வழங்கி வருகிறது.

ஆரம்பத்தில் இருந்தே சீன சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த விருதை வென்றனர்.

ஆனால் கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ் அறவாரியத்திற்கு அவ்விருது வழங்கப்பட்டது.

தற்போது தமிழ் அறவாரியத்தின் பரிந்துரையின் கீழ் கல்வியாளர் நாராயணசாமிக்கு அவ்விருது வழங்கப்படவுள்ளது.

தமிழ் மொழி, கல்வியின் மேம்பாட்டிற்கு அவர் ஆற்றியுள்ள சேவைக்கு இந்த விருது ஒரு அங்கீரமாக அமையும் என்று திரவியம் நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset