செய்திகள் மலேசியா
ஆப் இ-சிகரெட் சோதனையில் 8.87 மில்லியன் மதிப்புள்ள மின் சிகரெட்டுகள் பறிமுதல்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் பிப்ரவரி 10-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ‘ஆப் இ-சிகரெட்’ நடவடிக்கையின் போது, 8.87 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மின்னணு புகைப்பிடி கருவிகள், திரவங்கள், உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையில் 154 வளாகங்கள் சோதனை செய்யப்பட்டதில், 141 வளாகங்கள் சட்டமீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறையின் செயல் இயக்குநர், டத்தோ ஃபிசோல் சாலே தெரிவிப்பதன்படி, 958.85 லிட்டர் மின்னணு புகைப்பிடி திரவங்கள், 83,289 கருவிகள், பல்வேறு துணை உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், 2,140 அதிகாரிகளும், பணியாளர்களும் ஈடுபட்ட இந்தச் சோதனையில், 181 நபர்கள் விசாரணை செய்யப்பட்டு, சட்டவிரோத வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
மின்னணு புகைப்பிடி பயன்பாடு, மாணவர்களிடையே அதிகரிப்பது கடும் கவலைக்குரியது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 2:13 am
மலேசியாவில் மரியாதைக்குரிய நம்பிக்கை ஊடகம் இந்தியாவிலும் உச்சம் அடையும்: டத்தோஸ்ரீ சரவணன்
February 16, 2026, 4:44 pm
ஆள் கடத்தல் வழக்கில் இரண்டு கார் மெக்கானிக்கின் மீது நீதிமறத்தில் குற்றஞ்சாட்டு
February 16, 2026, 1:56 pm
மக்களின் உணர்வுகளை டத்தோஸ்ரீ அன்வார் குறைத்து மதிப்பிடக் கூடாது: ரபிசி
February 16, 2026, 1:11 pm
பெர்சத்துவில் முக்கிய தலைவர்கள் நீக்கம்; முதலில் அவர்கள் மோதிக் கொள்ளட்டும்: பிரதமர்
February 16, 2026, 12:58 pm
பண்டிகைக் காலங்களில் காசநோய் பரவலின் அபாயம் அதிகரிப்பு: நிபுணர் எச்சரிக்கை
February 16, 2026, 12:36 pm
மலேசிய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது: பிரதமர் அன்வார்
February 16, 2026, 11:54 am
அவசர மருத்துவ அழைப்பில் தவறான இடத்தின் தகவல்: ஆம்புலன்ஸ் விவகாரத்தில் அதிகாரப்பூர்வ விளக்கம்
February 16, 2026, 11:51 am
