நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அவசர மருத்துவ அழைப்பில் தவறான இடத்தின் தகவல்: ஆம்புலன்ஸ் விவகாரத்தில் அதிகாரப்பூர்வ விளக்கம்

ஈப்போ:

ஜெலாப்பாங் பகுதியில் நிகழ்ந்த உயிரிழப்புச் சம்பவத்தில், விபத்து இடத்திற்கு ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாக கூறப்படும் தகவல்கள் துல்லியமற்றவை என பேராக் மாநில சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

பிப்ரவரி 10ஆம் தேதி ஈப்போ, லுமுட் சாலையில் நடந்த விபத்தில், காவல் துறை கண்காணிப்பு வாகனமும் ஒரு சிறிய கார் ஒன்றும் மோதியதில், மூன்று வயது சிறுமி உயிரிழந்தார்.

சமூக ஊடகங்களில் வெளியான ஆம்புலன்ஸ் தாமதம் குறித்த குற்றச்சாட்டுகளை மருத்துவமனை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

அவசர அழைப்பு கிடைத்த உடனே, ராஜா பெர்மைசூரி பய்னுன் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு, மாலை 3.05 மணிக்கு ஆம்புலன்ஸை அனுப்பியது.

ஆனால், முதற்கட்டத்தில் அழைப்பை அளித்தவர் வழங்கிய இடத் தகவல் புன்சாக் ஜெலாப்பாங் குடியிருப்பு பகுதி என தவறாக இருந்தது. அங்கு சென்றபோது விபத்து எதுவும் கண்டறியப்படவில்லை.

பின்னர் மீண்டும் செய்யப்பட்ட உறுதிப்படுத்தல் அழைப்பின் மூலம், உண்மையான விபத்தின் இடம் ஈப்போ,லுமுட் விரைவுச்சாலையில், ஜெலாப்பாங் நோக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவசர மருத்துவ ஒருங்கிணைப்பு மையம் மூலம் அழைப்பு பெறப்பட்டதும், அவசர நடைமுறைகளின்படி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது என சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset